உலகிலேயே சிறந்த நாடாக இந்தியா விளங்குவதாக அமெரிக்காவைச் சேர்ந்த இன்ஸ்டாகிராம் பிரபலம் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் டெக்சாஸை மாகாணத்தைச் சேர்ந்த இன்ஸ்டகிராம் பிரபலம் மார்வின் ஆச்சி, இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, அதனை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.
அதில், உலகிலேயே தாம் சென்ற நாடுகளில் சிறந்த நாடாக இந்தியா விளங்குவதாகவும், குறிப்பாகக் கிராமப்புற மக்களின் அன்பும், அரவணைப்பும் தம்மை வியப்பில் ஆழ்த்தியதாகவும் கூறியுள்ளார்.
மேலும், இந்தியாவையும், அதன் மக்களையும் பாராட்டி வீடியோ ஒன்றையும் பகிர்ந்துள்ளார். அதில் நன்றி இந்தியா, உங்களை மிஸ் பண்ணுவேன்! உங்களை நேசிக்கிறேன்,விரைவில் சந்திப்போம் என்று கூறியுள்ளார்.
இந்தியாவைப் பாராட்டி அமெரிக்காவைச் சேர்ந்த இன்ஸ்டாகிராம் பிரபலம் வெளியிட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பகிரப்பட்டு வருகிறது.