சென்னையை அடுத்த கோவிலம்பாக்கம் ஊராட்சி அலுவலகத்தில் பணியாற்றிய ஊழியர்களை மதுபோதையில் ஊராட்சியைச் செயலர் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவிலம்பாக்கம் ஊராட்சியில், ஊராட்சி செயலராக ஏழுமலை என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர் மதுபோதையில் சென்று ஊழியர்களைத் தாக்கியுள்ளார்.
அப்போது, ஊராட்சி மன்ற தலைவர் கீதா மணிமாறன்தான் தாக்கச் சொன்னதாகக் கூறியுள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த ஊழியர்கள், மதுபோதையில் வந்து தாக்குதலில் ஈடுபட்ட ஊராட்சி செயலர் ஏழுமலை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.