வெனிசுலா தலைநகர் கராகசில் பெய்து வரும் தொடர் கனமழையால், அப்பகுதி முழுவதும் வெள்ளம் சூழ்ந்தது.
வெனிசுலாவின் பல்வேறு பகுதிகளில் இடைவிடாது கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாகத் தலைநகர் கராகசில் உள்ள மரியோ பிரைசெனோ, ப்ரோபாட்ரியா உள்ளிட்ட இடங்களில் மழைநீர் காட்டாற்று வெள்ளம் போல் கரைபுரண்டு ஓடியது.
இதில், சாலையோரங்களில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் வெள்ளத்தில் மூழ்கின. அப்போது, வாகனங்கள் அடித்துச் செல்லப்படுவதைத் தவிர்க்கும் வகையில் அதன் உரிமையாளர்கள் இருசக்கர வாகனங்களைப் பிடித்தபடி நின்றனர்.
வடிகால் மற்றும் கழிவுநீர் பராமரிப்புப் பணிகள் முறையாக மேற்கொள்ளப்படாததால் நகரின் முக்கிய இடங்களில் இதுபோன்ற பிரச்சனைகள் ஏற்படுவதாக மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.