ராஜஸ்தானைச் சேர்ந்த மாணிகா விஸ்வகர்மா மிஸ் யுனிவர்ஸ் இந்தியா 2025 பட்டத்தை வென்றுள்ளார்.
மிஸ் யுனிவர்ஸ் இந்தியா 2025 பட்டத்துக்கான இறுதிப்போட்டி ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடைபெற்றது. இதில், கடந்த ஆண்டு மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை வென்ற ராஜஸ்தான் மாநிலம் ஸ்ரீகங்காநகர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணிகா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அப்போது, அறிவுத்திறன் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் நடைபெற்ற போட்டியில் மாணிகா விஸ்வகர்மா வெற்றி பெற்று மகுடம் சூடினார்.
இதனையடுத்து மிஸ் யுனிவர்ஸ் இந்தியாவாகத் தேர்வான மாணிகா, நவம்பரில் தாய்லாந்தில் நடைபெறும் 74வது மிஸ் யுனிவர்ஸ் உலக அழகிப் போட்டியில் இந்தியாவின் சார்பாக முன்நிறுத்தப்படவுள்ளார்.