உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில் ராணுவ வீரரை சுங்கச்சாவடி ஊழியர்கள் தாக்கியதால் பொதுமக்கள் சுங்கச்சாவடியைச் சேதப்படுத்தினர்.
கபில் என்ற ராணுவ வீரர் சுங்கச்சாடிவயில் ஏற்பட்ட தாமதம் குறித்து கேள்வி எழுப்பியதால் சுங்கச்சாவடி ஊழியர்கள் அவரை கட்டி வைத்து சரமாரியாகத் தாக்கினர்.
இந்த காட்சிகள் இணையத்தில் வைரலான நிலையில் உள்ளூர் வாசிகள் சுங்கச்சாவடியை அடித்து நொறுக்கியதால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சுங்கச்சாவடி ஊழியர்கள் ஆறு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.