டெல்லியில் உள்ள யமுனை நதியின் நீர்மட்டம் அபாய அளவைத் தாண்டியதை அடுத்து, ஓக்லா தடுப்பணை கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.
கடந்த சில நாட்களாகப் பெய்து வரும் கனமழையின் காரணமாக யமுனை நதிக்கு நீர்வரத்து கணிசமாக அதிகரித்து வந்தது.
இது படிப்படியாக உயர்ந்து 205.33 அடியை எட்டியதால், பொதுமக்களின் நலன் கருதி தண்ணீரை வெளியேற்ற முடிவு செய்து அதிகாரிகள் ஓக்லா தடுப்பணையின் கதவுகளைத் திறந்து விட்டுள்ளனர்.