அழிந்து வரும் காக்டூ ரக கிளிகளைப் பாதுகாக்கும் பணியில் இந்தோனேசிய இயற்கை ஆர்வலர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
அறிய வகை பறவை இனங்களில் ஒன்றான காக்டூ ரக கிளிகள் இந்தோனேசியாவிலும், ஹாங்காங்கிலும் பரவலாகக் காணப்படுகின்றன.
மொத்தமாக ஆயிரத்து 200 முதல் 2 ஆயிரம் வரையிலான பறவைகள் மட்டுமே உள்ளதாகக் கூறப்படும் நிலையில் இந்தோனேசியாவில் இந்த பறவைகள் பாதுக்காப்பாக மீட்டுப் பராமரிக்கப்படுகின்றன.
இவற்றிற்கென உணவு மற்றும் இருப்பிடம் வழங்கிய இயற்கை ஆர்வலர்கள், காக்டூ பறவைகள் மீது கவனம் செலுத்த வேண்டியது அவசியம் என வலியுறுத்தி உள்ளனர்.