ரயில்வே கிராசிங்கில் காத்திருப்பதைத் தவிர்க்க 112 கிலோ எடையுள்ள இருசக்கர வாகனத்தைத் தோளில் சுமந்தபடி சென்ற இளைஞரின் வீடியோ வைரலாகியுள்ளது.
சம்பவத்தன்று ரயில் வரவே அதன் கேட் மூடப்பட்டிருந்தது. இதனால் சாலைகளில் இருபுறங்களிலும் வாகனங்கள் காத்திருந்தன. சிக்கெனலுக்காகக் காத்திருந்தவர்கள் மத்தியில் ஒரு இளைஞர் மட்டும் தனது 112 கிலோ எடை கொண்ட பைக்கை தோளில் சுமந்தப்படி ரயில்வே டிராக்கினை கடந்து சென்றார்.
அப்போது, அங்கிருந்த நபர்கள் தங்களது செல்போனில் வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர்.
ஆனால் இந்த சம்பவம் எங்கு நிகழ்ந்தது என்பது குறித்து விபரங்கள் தெரியாத போதிலும், சம்பந்தப்பட்ட நபர் செய்ததது தவறு என்றும், அந்த நபரை கண்டறிந்து கைது செய்ய வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.