சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில் கார்லஸ் அல்காரஸ் சாம்பியன் பட்டம் வென்றார்.
அமெரிக்காவின் சின்சினாட்டியில் நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில் தரவரிசையில் நம்பர் 1 இடத்தில் உள்ள இத்தாலியின் ஜானிக் சின்னர், 2-வது இடத்தில் உள்ள ஸ்பெயினின் கார்லஸ் அல்காரஸ் உடன் மோதினார்.
பரபரப்பாக நடைபெற்ற இறுதிப்போட்டியின் முதல் செட்டில் அல்காரஸ் 5-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தபோது திடீரென ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாகச் சின்னர் ஆட்டத்தில் இருந்து விலகினார்.
இதனையடுத்து அல்காரஸ் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டு சாம்பியன் பட்டம் அவருக்கு வழங்கப்பட்டது.