மடப்புரம் கோயில் காவலாளி அஜித் குமார் கொலை வழக்கில் இன்று விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், நேற்று இறுதிக்கட்ட விசாரணையில் சிபிஐ அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டனர்.
சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தை அடுத்த மடப்புரம் கோயில் காவலாளி அஜித் குமார், கடந்த ஜுன் 28-ம் தேதி திருட்டு வழக்கு விசாரணையின்போது தனிப்படை போலீசாரால் அடித்து கொல்லப்பட்டார்.
இந்த வழக்கில் 5 போலீசார் கைது செய்யப்பட்ட நிலையில், உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவின் பேரில் வழக்கு விசாரணை சிபிஐ-க்கு மாற்றப்பட்டது.
தொடர்ந்து சிபிஐ எஸ்.பி ரஜ்பீர் சிங் மேற்பார்வையில், டிஎஸ்பி மோஹித் குமார் தலைமையிலான அதிகாரிகள், ஜூலை 12-ம் தேதி FIR பதிவு செய்து ஜூலை 14-ம் தேதி விசாரணையைத் தொடங்கினர்.
30 நாட்களுக்கு மேலாக நடைபெற்ற விசாரணையில் சிபிஐ அதிகாரிகள் வழக்கில் சம்மந்தப்பட்ட அனைவரிடமும் விசாரணை நடத்தி பல்வேறு ஆவணங்களைச் சேகரித்தனர்.
இந்நிலயில், விசாரணை அறிக்கையை இன்று தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், நேற்று சிபிஐ அதிகாரிகள் திருப்புவனம் காவல் நிலையத்தில் இறுதிக்கட்ட விசாரணையில் ஈடுபட்டனர்.