ஆசியத் துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் மனு பாக்கர் வெண்கல பதக்கம் வென்றார்.
கஜகஸ்தானில் உள்ள ஷிம்கென்ட் நகரில் ஆசியத் துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் ஆடவருக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் அணிகள் பிரிவில் இந்தியா வெள்ளிப் பதக்கம் வென்றது.
இந்நிலையில், மகளிருக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் மனு பாக்கர் வெண்கலப் பதக்கம் வென்றார். அவர் 219.7 புள்ளிகள் பெற்று 3-வது இடம் பிடித்து வெண்கலப் பதக்கத்தைக் கைப்பற்றினார்.
பாரிஸ் 2024 ஒலிம்பிக்கில் இரண்டு வெண்கலப் பதக்கம் வென்ற நிலையில், ஆசியத் துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் தொடரிலும் வெண்கலம் வென்று இந்தியாவின் மனு பாக்கர் அசத்தியுள்ளார்.