சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டியில் இகா ஸ்வியாடெக் சாம்பியன் பட்டம் வென்று அசத்தி உள்ளார்.
முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவில் நடைபெற்றது.
இதில் மகளிர் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டி ஆட்டத்தில் போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக், இத்தாலியின் ஜாஸ்மின் பலோனி உடன் மோதினார்.
தொடக்கம் முதலே அபாரமாக விளையாடிய இகா ஸ்வியாடெக் 7-5, 6-4 என்ற புள்ளிக்கணக்கில் ஜாஸ்மின் பலோனியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றார்.