இந்தோனேசியாவில் சூப்பர் மார்க்கெட்டிற்குள் முதலை புகுந்ததால் மக்கள் அச்சமடைந்தனர்.
இதுகுறித்த தகவலின் பேரில் அங்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள், 10 அடி நீளமுள்ள முதலையைப் பிடிக்க முடியாமல் திணறினர். நீண்ட நேரப் போராட்டத்திற்குப் பிறகு கயிறு கட்டி முதலையைப் பிடித்துச் சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.