மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் கனமழை காரணமாக ரயில்கள் தாமதமானதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.
மும்பை, தானே உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாகக் கனமழை பெய்து வருவதால் சாலைகளில் மழையில் ஆறுபோல் பெருக்கெடுத்து ஓடுகிறது.
மேலும் தண்டவாளங்களில் மழைநீர் தேங்கியதால் ரயில் போக்குவரத்து தாமதமாக இயக்கப்பட்டு வருகிறது. இதனால் மும்பை ரயில் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதியது. 6 மணி முதல் 8 மணி வரை ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டதால் பயணிகள் அவதிக்குள்ளாகினர்.