குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் போட்டியிடும், தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் வேட்பு மனுத் தாக்கல் செய்தார்.
நாட்டின் 17வது குடியரசு துணைத் தலைவர் தேர்தல் அடுத்த மாதம் ஒன்பதாம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனுத் தாக்கல் நாளையுடன் முடிவடைகிறது.
இந்நிலையில் தேர்தலில் போட்டியிடும் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன், பிரதமர் மோடி முன்னிலையில் வேட்பு மனுத் தாக்கல் செய்தார்.
அப்போது மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித் ஷா, ஜெ.பி.நட்டா, எல்.முருகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
முன்னதாக வேட்புமனு தாக்கல் செய்ய வருகை தந்த சி.பி ராதாகிருஷ்ணன் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள தலைவர்களின் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.