டெல்லியில் சுமார் 50 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டதால் போலீசார் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
தலைநகர் டெல்லியில் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் வருவது தொடர்கதையாகி வருகிறது. இந்நிலையில் இன்று மால்வியா நகரில் உள்ள அரசு சர்வோதய கன்யா வித்யாலயா உட்பட 50க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் அனுப்பப்பட்டுள்ளது.
இதையடுத்து பள்ளி மாணவர்கள் வெளியேற்றப்பட்டு மோப்ப நாய்கள் மற்றும் தடயவியல் நிபுணர்களை வரவழைத்து போலீசார் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.