ஆண்டுதோறும் பெருமழையின்போது மகாராஷ்டிரா மாநில மக்கள் சொல்லொணாத் துயருக்கு ஆளாவதைத் தடுக்கும் வகையில், அம்மாநில பேரிடர் மேலாண்மையைத் தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலான பாஜக அரசு மேம்படுத்துகிறது. அதுகுறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு.
ஆண்டுதோறும் மகாராஷ்டிரா மாநிலம் பெருமழையைச் சந்திப்பது வாடிக்கை. மும்பை உள்ளிட்ட முக்கிய நகரங்கள் வெள்ளத்தில் மிதக்கும். லட்சக்கணக்கான மக்கள் சொல்லொணாத் துயருக்கு ஆளாவார்கள். பேருந்து, ரயில், விமானம் என அனைத்துவிதமான போக்குவரத்தும் பாதிக்கப்படும். இதற்கெல்லாம் முடிவுகட்டுவதற்கான முன்மொழிவை முன்னெடுத்திருக்கிறது தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலான பா.ஜ.க. அரசு.
மாநில அளவில் அவசரக்கால செயல்பாட்டு மையம் தொடக்கம், மாவட்டங்களில் உள்ள EMERGENCY OPERATION CENTER-களை நவீனப்படுத்துதல், பேரிடர் மேலாண்மையைக் கற்றுக்கொடுக்கத் தனி கல்வி நிறுவனத்தைத் தொடங்குதல் என மூன்று முக்கியமான நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறார் தேவேந்திர பட்னாவிஸ். பா.ஜ.க. அரசின் இந்த செயல்பாடுகள் விரிவான, ஒருங்கிணைந்த மற்றும் வலுவான பேரிடர் மேலாண்மைக்கு வழிகோலும் வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கை என்கிறார்கள் வல்லுநர்கள்.
DISASTER MANAGEMENT-க்கென தனி இணையதளமும் ‘AAPATTI SAHAYAK’ என்னும் அலைப்பேசி செயலியும் தொடங்கப்பட்டுள்ளன. அவசரக்கால செயல்பாட்டு மையம் நவீனப்படுத்தப்படுவதை வெறும் தொழில்நுட்ப வளர்ச்சியாக மட்டும் பார்க்கக்கூடாது. பாதுகாப்புடன் கூடிய ஒருங்கிணைந்த மற்றும் விரைவான செயல்பாட்டின் தொடக்கம் இது. விதிகளுக்கு உட்பட்டு உலகத் தரத்துக்கு இணையாக அவசரக்கால செயல்பாட்டு மையம் மேம்படுத்தப்பட்டுள்ளது. தகவல்களைப் பெறுவதற்கும் கடத்துவதற்கும் தேவையான அதிநவீன தொழில்நுட்ப வசதிகள் STATE EMERGENCY OPERATION CENTER-ல் உள்ளன.
அதிக செயல்திறன் கொண்ட கணினிகள், காணொலி மூலம் கலந்துரையாடும் வசதி, ஏராளமான தகவல்களைச் சேமித்து வைக்கும் SERVER-கள், SATELLITE PHONE, WIRELESS கருவிகள், செயற்கைக்கோள் மற்றும் AI தொழில்நுட்பத்துடன் புவியைக் கண்காணிக்கும் வசதி என பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இயற்கைப் பேரிடர்களால் உண்டாகும் பாதிப்புகளை நிகழ் நேரத்தில் கண்டறிந்து மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள நவீனத் தொழில்நுட்பங்கள் பெரிதும் உதவும்.
பேரிடர் காலத்தின் போது மக்களுக்கும் அரசு நிர்வாகத்துக்கும் இடையே இணைப்புப் பாலமாகச் செயல்படுவதற்காக ‘AAPATTI SAHAYAK’ செயலி உருவாக்கப்பட்டுள்ளது. அவசர காலத்தில் உதவி தேவைப்படும் மக்கள், SOS வசதியைப் பயன்படுத்தி கட்டுப்பாட்டு அறையைத் தொடர்புகொள்ள முடியும். மேலும் புகைப்படம், வீடியோ மற்றும் LOCATION-ஐயும் அனுப்பலாம். இத்தகைய செயல்பாடுகள் மூலம் எதிர்காலத்தில் பேரிடர்களால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்க முடியும்.