மதுரை தவெக மாநாட்டுக்காக நட முயன்ற 100 அடி கொடி கம்பம் சாய்ந்து விழுந்ததில் கார் சேதமடைந்தது.
தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மதுரையில் நாளை 2-வது மாநில மாநாடு பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. மாநாட்டில் 15 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படும் நிலையில், முன்னேற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
முதல் மாநாட்டைப் போலவே 2-வது மாநாட்டுக்காகவும், 100 அடி உயர கொடிக்கம்பத்தை நிறுவும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. அப்போது, எதிர்பாராத விதமாக கொடிகம்பம் சாய்ந்து விழுந்தது. இதில் தவெக நிர்வாகியின் கார் முற்றிலும் சேதமடைந்த நிலையில், அதிர்ஷ்டவசமாக உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.