பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், வேலை வாங்கித் தருவதாக பணமோசடி செய்து கைதான அமைச்சரை இலாகா இல்லாத அமைச்சராகத் தக்க வைத்துக் கொண்ட வெட்கமில்லாத அரசை விடக் கருப்பான மற்றும் அவமானகரமானது வேறில்லை எனக் கூறியுள்ளார்.
சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட பிறகு செந்தில் பாலாஜிக்கு மீண்டும் அமைச்சர் பொறுப்பை வழங்கியதாகவும் உச்சநீதிமன்றத்தின் கடும் விமர்சனத்தைத் தொடர்ந்து பதவி பறிக்கப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
INDI கூட்டணியின் இன்னொரு ஊழல் வீரர் அரவிந்த் கெஜ்ரிவால் எனவும், ஊழல் குற்றச்சாட்டில் சிறையில் இருந்தும் பல மாதங்களாக முதலமைச்சர் பதவியைப் பிடித்துக் கொண்டிருந்தார் எனவும் கூறியுள்ளார்.
130வது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவிப்பது தங்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தவில்லை எனத் தெரிவித்துள்ள அண்ணாமலை ஊழல் தான் INDI கூட்டணியால் பின்பற்றப்படும் ஒரே அரசியலமைப்பு என விமர்சித்துள்ளார்.