பாகிஸ்தானில் கட்டாய மதமாற்றம் நடப்பதாக ஐநா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானில் சிறுபான்மை மக்களாக இந்துக்கள் வசித்து வரும் நிலையில் அவர்கள் மீது நாள்தோறும் அடக்குமுறை கட்டவிழ்க்கப்படுவதாகக் குற்றச்சாட்டுகள் எழுகின்றன.
பெண்கள் மீதான பாலியல் குற்றங்களும் நாள்தோறும் அதிகரிக்க, அதனை அடக்க முடியாமல் பாகிஸ்தான் அரசு கையை பிசைந்து கொண்டு வேடிக்கை பார்ப்பதாகவே மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
இந்நிலையில், ஜ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் பாதிக்கப்பட்ட பாகிஸ்தான் மக்களுக்கு ஆதரவாக இந்தியா தனது குரலை ஓங்கி ஒலித்துள்ளது.
பாகிஸ்தானில் கட்டாய மதமாற்றத்தால் சிறுபான்மையின மக்களின் மத வழிபாட்டு உரிமை பறிக்கப்படுவதாகவும், பெண்கள் வெளியே சென்றால் பத்திரமாக வீடு திரும்புவோமோ என்ற அச்சத்துடனே வாழ்ந்து வருவதாகவும் இந்தியா தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது.