திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரம்மோற்சவ விழாவிற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் செப்டம்பர் 24ஆம் தேதி முதல் அக்டோபர் 2ஆம் தேதி வரை 9 நாட்கள் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடைபெற உள்ளது.
இதையொட்டி, திருப்பதி தேவஸ்தானமும், மாவட்ட நிர்வாகமும் இணைந்து, கோயில் வளாகம் முழுவதும் நேற்று ஆய்வு மேற்கொண்டது. வாகன சேவை, போக்குவரத்து வசதி, விடுதி வசதி, தூய்மைப்பணி, அன்னப்பிரசாதம், அலங்காரம் உள்ளிட்ட ஏற்பாடுகள் தொடர்பாக ஆய்வு நடத்தப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த தேவஸ்தான தலைமை செயல் அலுவலர், பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்ச்சியாகச் செப்டம்பர் 28ஆம் தேதி கருடசேவையும், அக்டோபர் 2ஆம் தேதி சக்கர ஸ்நானமும் நடைபெறுமெனத் தெரிவித்தார்.
மேலும், பிரம்மோற்சவ விழாவில் கலந்து கொண்டவர்களின் எண்ணிக்கை குறித்து இஸ்ரோவுடன் இணைந்து கணக்கெடுப்பு எடுக்கவும், கூட்ட நெரிசலை தவிர்க்கத் தேவையான இடங்களைத் தேர்வு செய்ய சேட்டிலைட் உதவியை நாட உள்ளதாகவும் தெரிவித்தார்.