தந்தை சொத்தில் உரிமை மறுக்கப்படுவதாக ஐசரி கணேஷ் மீது அவரது சகோதரி புகார் அளித்துள்ளார்.
மறைந்த முன்னாள் அமைச்சர் ஐசரி வேலன் நினைவாக அவரது மகன் ஐசரி கணேஷ் சென்னையில் வேல்ஸ் கல்வி அறக்கட்டளையை நிறுவினார்.
அதில் நிரந்தர நிர்வாகியாக ஐசரி வேலனின் இளைய மகள் அழகு தமிழ்ச் செல்வி உள்ளார். இந்நிலையில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் தனது சகோதரர் ஐசரி கணேஷ் மீது அழகு தமிழ்ச் செல்வி மோசடி புகார் அளித்துள்ளார்.
போலியான ஆவணங்கள் மூலம் அறக்கட்டளையிலிருந்து தனது பெயரை நீக்கி உள்ளதாகவும் ஆவணங்களைக் கேட்டதற்குத் தன்னை அவமதித்ததாகவும் குற்றம்சாட்டியுள்ளார். தந்தை சொத்தில் சம உரிமை உண்டு என்பதனால் சட்டரீதியாகப் போராடுவதாகவும் தெரிவித்துள்ளார்.