ஆகாச வீரனான தேஜஸ் போர் விமானங்கள் இந்திய வான் வழித்தடத்தைக் கட்டிக்காத்து வரும் நிலையில் மேலும் 97 விமானங்களைக் கொள்முதல் செய்ய மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.
இதற்காக 68 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தத்தையும் பாதுகாப்பு அமைச்சகம் மேற்கொண்டுள்ளது. இதன்படி, ஹிந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் நிறுவனம் போர் விமானங்கள் தயாரிக்கும் பணியில் முழுவீச்சில் இறங்கியுள்ளது.
ஏற்கனவே, 48 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் 83 தேஜஸ் விமானங்கள் ஆர்டர் செய்யப்பட்ட நிலையில், தற்போது அதனை மிஞ்சிய ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. மேக் இன் இந்தியா திட்டத்திற்கு வலுசேர்ப்பதாக இந்த ஒப்பந்தம் பார்க்கப்படுகிறது.