திருத்தணியில் ஒழுங்காக ஃபோட்டோ எடுக்காத கேமராமேனை சீமான் வசைபாடிய சம்பவம் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
திருத்தணி அருகே அருங்குளம் கூட்ரோடு சந்திப்பில், நாம் தமிழர் கட்சி சார்பில் மரங்களின் மாநாடு நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை பார்வையிட சென்ற சீமான், மரங்களை கட்டிப்பிடிப்பது, முத்தம் கொடுப்பது போன்று போட்டோசூட் நடத்தினார்.
மரங்களை கொஞ்சி குலாவுவது போல் சீமான் ஆக்ஷன் செய்து கொண்டிருக்க, கேமராமேன் போட்டோ எடுப்பதில் சொதப்பிவிட்டாராம். அவ்வளவு தான் கோபத்தின் உச்சிக்கே சென்ற சீமான், கேமராமேனை வசைபாட தொடங்கிவிட்டார். பொதுவெளியில் கேமராமேனை சீமான் திட்டியது கட்சி நிர்வாகிகள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது.