சர்வதேச டி20 தரவரிசையில் தென்னாப்பிரிக்காவின் அதிரடி ஆட்டக்காரர் டெவால்டு பிரேவிஸ் 89 இடங்கள் முன்னேறி உள்ளார்.
சர்வதேச டெஸ்ட், ஒருநாள், டி20 போட்டிகளின் தரவரிசைப் பட்டியல் வாரந்தோறும் புதன்கிழமைகளில் வெளியிடப்படுகிறது. இந்த வாரத்துக்காக டி20 தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது.
தென்னாப்பிரிக்கா – ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் டெவால்டு பிரேவிஸ் 125 ரன்களை விளாசினார். இதனால் 101 வது இடத்தில் இருந்த டெவால்டு பிரேவிஸ், கடந்த வாரம் மளமளவென 80 இடங்கள் முன்னேறி 21 வது இடத்தைப் பிடித்திருந்தார்.
3வது டி20 போட்டியில் அதிரடியாக விளையாடி 26 பந்துகளில் 53 ரன்கள் குவித்திருந்தார். இதனால், இந்த வாரத் தரவரிசைப் பட்டியலில் மேலும் 9 இடங்கள் முன்னேறி, 12 வது இடத்தைப் பிடித்துள்ளார்.