வர்த்தக துறையில் சீனாவை ஆதரித்துவிட்டு இந்தியாவை எதிர்ப்பதால் என்ன பலன் கிடைக்கப்போகிறது என அமெரிக்காவின் முன்னாள் கருவூலச் செயலாளர் எவான் ஃபெய்கன்பம் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்தியா மீதான 50 சதவீத வரிவிதிப்பை கடுமையாக சாடியுள்ள அவர், சீனாவை எதிர்க்காமல் காலம் காலமாக நட்பு நாடாக இருக்கும் இந்தியாவை எதிர்ப்பது, அமெரிக்காவின் ராஜாங்க வரலாற்றில் மாபெரும் பிழை எனவும் கூறியுள்ளார்.
ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகள் எத்தனையோ இருக்க, ட்ரம்பின் முதல் குறியாக இந்தியா இருப்பது ஏன் எனவும் அவர் வினவியுள்ளார்.
ரஷ்யா உடனான வர்த்தகத்தை நிறுத்தாவிட்டால் , இந்தியாவுக்கு மேலும் மேலும் வரி விதிக்கப்படும் என தற்போதைய கருவூலச் செயலாளர் ஸ்காட் பெசண்ட் எச்சரித்த நிலையில், எவான் ஃபெய்கன்பம் தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.