கோவை மாவட்டம் ஆனைமலை அடுத்த கோட்டூர் அருகே தென்னை நார் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில், லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்தன.
பாலு என்பவருக்குச் சொந்தமான தென்னை நார் தொழிற்சாலையில், தேங்காய் நார்களை உலர்த்திக் கொண்டிருந்தபோது திடீரென தீப்பற்றி எரிந்ததாகக் கூறப்படுகிறது. தகவல் அறிந்து விரைந்த தீயணைப்புத் துறையினர், நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர்.