கர்நாடகாவில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் சட்ட மசோதா ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பெங்களூருவில் ஐபிஎல் போட்டியில் ஆர்சிபி வென்றதன் வெற்றிக் கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர். இதைத் தொடர்ந்து, இதுபோன்ற சம்பவங்களை தடுக்க கர்நாடக அரசு கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் சட்ட மசோதாவை கொண்டுவர முடிவு செய்தது.
கர்நாடக உள்துறை அமைச்சர் பரமேஷ்வரா, இந்த மசோதாவை சட்டசபையில் நேற்று தாக்கல் செய்தார். இந்த மசோதாவில், கூட்டத்தை கட்டுப்படுத்தும் விதிகளை மீறுபவர்களுக்கு 3 முதல் 7 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.