பயணிகளின் வசதிக்காக உருவாக்கப்பட்ட குறைந்த எடைகொண்ட உதகை மலை ரயில் விரைவில் இயக்கப்படும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குன்னூர் முதல் மேட்டுப்பாளையம் வரை மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இதனிடையே பயணிகளின் வசதிக்காக எடை குறைந்த 28 ரயில் பெட்டிகள் சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டன.
இதில் 4 பெட்டிகளை கொண்டு நேற்று சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. இதையடுத்து மீதமுள்ள 24 பெட்டிகளை சோதனைக்கு உட்படுத்தி விரைவில் மலை ரயில் இயக்கப்படும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஒரு பெட்டியில் 42 பேர் வீதம் பயணம் செய்யலாம் எனவும் அவர்கள் குறிப்பிட்டனர். முன்னதாக புதிய ரயில்பெட்டிகளில் சுற்றுலா பயணிகள் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்