தர்மஸ்தலா வழக்கில் புதிய திருப்பம் : சதித்திட்டம் தீட்டிய தமிழக காங்கிரஸ் எம்.பி?
Sep 13, 2026, 02:23 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தர்மஸ்தலா வழக்கில் புதிய திருப்பம் : சதித்திட்டம் தீட்டிய தமிழக காங்கிரஸ் எம்.பி?

Murugesan M by Murugesan M
Aug 21, 2025, 08:00 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தர்மஸ்தலா வழக்கின் பின்னணியில் திருவள்ளூர் எம்.பி சசிகாந்தின் சதி இருப்பதாகக் கர்நாடக மாநில பாஜக முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி தெரிவித்திருப்பது பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. நாட்டையே உலுக்கும் வழக்கில் தமக்குத் தொடர்பிருப்பதாக எழுந்த புகாருக்கு அமைதி காப்பதன் மூலம் அவர் மீதான சந்தேகத்தை அதிகப்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடாவின் தர்மஸ்தலாவில் புகழ்பெற்ற மஞ்சுநாதா சுவாமி அமைந்துள்ளது. இந்த கோயில் அருகே ஓடும் நேத்ரவதி ஆற்றங்கரையில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட நூற்றுக்கணக்கான பெண்களின் உடல்களைப் புதைத்ததாக முன்னாள் ஊழியர் ஒருவர் அளித்த வாக்குமூலம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இது தொடர்பாகச் சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணை நடத்தி வரும் நிலையில், சென்னையைச் சேர்ந்த அடையாளம் தெரியாத கும்பல் ஒன்று தன்னை கட்டாயப்படுத்தி இந்த விவரத்தைப் பேசச் சொன்னதாகப் புகார்தாரர் பிறழ் சாட்சி அளித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

புகார்தாரர் அளித்திருக்கும் வாக்குமூலம் உண்மையானது தானா? சென்னையிலிருந்து புகார்தாரரை மிரட்டிய கும்பல் எது என்ற கோணத்தில் சிறப்புப் புலனாய்வுக் குழுவின் விசாரணை விரிவடையத் தொடங்கியுள்ளது. இந்த நிலையில் பாஜகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி, புகார் தாரருக்கும் தமிழகத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பி. சசிகாந்த் செந்திலுக்கும் தொடர்பிருப்பதாகப் பகிரங்கத் தகவலை வெளியிட்டுள்ளார்.

தமிழகத்தின் திருவள்ளூர் தொகுதி எம்.பியான சசிகாந்த் செந்தில், 2009 ஆம் ஆண்டுமுதல் 2012ஆம் ஆண்டு வரை கர்நாடக மாநிலம் பல்லாரியின் உதவி கலெக்டராகவும், சித்ரதுர்கா, ராய்ச்சூர், தட்சிண கன்னடா போன்ற மாவட்டங்களின் ஆட்சியராகவும் பணியாற்றியுள்ளார். கர்நாடக மாநிலத்தில் ஐஏஎஸ் அதிகாரியாக பணியாற்றிய அனுபவத்தைப் பயன்படுத்தி சதித்திட்டம் தீட்டி கோடிக்கணக்கான பக்தர்கள் வரும் மஞ்சுநாதா கோயிலின் பெருமையையும், புகழையும் சிதைக்க சசிகாந்த் செந்தில் முயற்சிப்பதாகவும் பாஜக முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி தனது பேட்டியில் தெரிவித்துள்ளார்.

மேலும் தர்மஸ்தலா வழக்கைச் சிறப்புப் புலனாய்வுக் குழுவிடம் வழங்க முதலமைச்சர் சித்தராமையாவுக்கு துளியளவும் விருப்பமில்லாத நிலையில் தமிழக காங்கிரஸ் எம்பி சசிகாந்த் செந்தில், காங்கிரஸ் மேலிடத்தின் மூலமாகக் கொடுத்த அழுத்தமே சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்கக் காரணம் எனவும் ஜனார்த்தன ரெட்டி தெரிவித்துள்ளார்.  மஞ்சுநாதா கோயிலின் புனிதத்தைக் கெடுக்க நடைபெறும் சதியை முறியடிப்பேன் எனவும், இந்த வழக்கை சிபிஐ அல்லது என்.ஐ.ஏ விசாரித்தால் தான் உண்மை வெளிவரும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டையே உலுக்கிக் கொண்டிருக்கும் தர்மஸ்தலா வழக்கில் தமிழகத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்பி ஒருவரின் பெயரும் அடிபடுவது தமிழகத்திலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சசிகாந்த் செந்திலைத் தொடர்புப் படுத்தி எழுந்திருக்கும் புகாருக்கு உரியப் பதிலை வழங்காமல் அமைதி காப்பது அவர் மீதான சந்தேகத்தையும் அதிகரிக்கச் செய்திருக்கிறது.

Tags: தமிழகத்தின் திருவள்ளூர் தொகுதி எம்.பியான சசிகாந்த்New twist in Dharmasthala case: Tamil Nadu Congress MP who hatched a conspiracy?தர்மஸ்தலா வழக்கில் புதிய திருப்பம்தமிழக காங்கிரஸ் எம்.பி?
Share
Tweet
SendShare
Previous Post

உள்நாட்டு விமானப் போக்குவரத்து இலவசம் – சுற்றுலா பயணிகளை ஈர்க்க தாய்லாந்து நடவடிக்கை!

Next Post

விரைவில் குறைந்த எடை கொண்ட உதகை மலை ரயில் – அதிகாரிகள் தகவல்!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies