சீனாவுக்கு ஒரு நியாயம், இந்தியாவுக்கு ஒரு நியாயம் : அமெரிக்காவின் இரட்டை நிலைப்பாடு!
Sep 12, 2026, 11:30 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

சீனாவுக்கு ஒரு நியாயம், இந்தியாவுக்கு ஒரு நியாயம் : அமெரிக்காவின் இரட்டை நிலைப்பாடு!

Murugesan M by Murugesan M
Aug 21, 2025, 09:00 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் சீனாவுக்கு அமெரிக்கா இதுவரை அதிகப்படியான வரி எதுவும் விதிக்கவில்லை. இதற்கு அமெரிக்கா கூறும் காரணம் குழப்பத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. இது குறித்த செய்தி தொகுப்பைப் பார்க்கலாம்.

ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதைக் காரணம் காட்டி, இந்தியாவுக்கு ட்ரம்ப், 50 சதவீதம் வரி வித்துள்ளார். ரஷ்யாவுடனான வர்த்தக உறவுதான் உண்மையிலேயே பிரச்சனை என்றால், சீனாவுக்குத்தான் அவர் அதிக வரி விதித்திருக்க வேண்டும். காரணம், இந்தியாவைக் காட்டிலும் சீனாதான் ரஷ்யாவிடம் இருந்து அதிக எண்ணெய் வாங்கி வருகிறது.

ஆனால், சீனா மீது தொடர்ந்து கரிசனத்துடன் நடந்து வரும் ட்ரம்ப், இந்தியாவுக்கு எதிராக மட்டும் தொடர்ந்து வாள் சுழற்றி வருகிறார். இதற்கான காரணம் என்ன என்பது இதுவரை யாருக்கும் தெரியவில்லை. இதுதான் காரணம் என அமெரிக்க அதிகாரிகள் கூறும் விளக்கங்கள் தெளிவை ஏற்படுத்தாமல், குழப்பத்தைத்தான் ஏற்படுத்துகின்றன.

அண்மையில் பேட்டியளித்த அமெரிக்காவின் கருவூல செயலாளர் ஸ்காட் பெசென்ட், ரஷ்யாவிடம் இருந்து தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெய்யை வாங்கி, அதனை இந்தியா சுத்திகரிக்கப்பட்ட பொருளாக மறுவிற்பனை செய்வதாகக் கூறினார். இதன் மூலம் இந்தியா ஒரு லட்சத்து 40 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக லாபம் ஈட்டுவதாகவும், இந்தியாவின் இந்த செயலை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் தெரிவித்தார்.

அதாவது, ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கி, அதனை வேறு இடங்களில் இந்தியா விற்பதுதான் அமெரிக்காவுக்கு பிரச்சனை எனக் கருவூல செயலாளர் ஸ்காட் பெசென்ட் கூறுகிறார். ஆனால், இதனையேதான் சீனாவும் செய்து வருகிறது. இருந்தபோதிலும் சீனா மீது ஏன் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பது புரியாத மர்மமாகவே உள்ளது.

இது குறித்து விளக்கம் அளித்த அமெரிக்காவின் வெளியுறவு செயலாளர் மார்கோ ரூபியோ, ரஷ்யாவிடம் இருந்து வாங்கும் கச்சா எண்ணெய்யைச் சீனா சுத்திகரித்து ஐரோப்பா உள்ளிட்ட உலக நாடுகளுக்கு விற்பனை செய்து வருவதாகவும்,  சீனாவுக்கு அதிக வரி விதித்தால் ஐரோப்பிய நாடுகளை அந்த வரி விதிப்பு பாதிக்கும் எனவும் தெரிவித்தார். இதனால்தான், சீனாவுக்கு அதிக வரி விதிக்கப்படவில்லை என, ஒரு வினோதமான விளக்கத்தை அவர் அளித்தார்.

இது ஏற்கனவே உள்ள குழப்பத்தை மேலும் அதிகப்படுத்துகிறது. சீனாவும், இந்தியாவும் ஒரே செயலைதான் செய்கின்றன. அப்படியென்றால் இருநாடுகளுக்கும் வரி விதிக்க வேண்டும். வரி விதிக்க வேண்டாம் என்று முடிவெடுத்தால் இரு நாடுகளுக்கும் வரி விதிக்கக் கூடாது. மாறாக, சீனாவுக்கு ஒரு நியாயத்தையும், இந்தியாவுக்கு ஒரு நியாயத்தையும் அமெரிக்கா கூறி வருகிறது.

ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதை, முந்தைய பைடன் அரசு ஊக்குவித்தது. அதனால், அமெரிக்கா மற்றும் இந்தியாவின் உறவு சுமுகமாக இருந்து வந்தது. ஆனால்,  அந்த சுமுக உறவை சீர்கெடுக்க என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ அதனை எல்லாம்  ட்ரம்ப் அரசு தற்போது செய்து வருவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

Tags: அமெரிக்காவின் இரட்டை நிலைப்பாடுரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் சீனாusaஅமெரிக்காOne justice for Chinaone justice for India: America's double standard
Share
Tweet
SendShare
Previous Post

விரைவில் குறைந்த எடை கொண்ட உதகை மலை ரயில் – அதிகாரிகள் தகவல்!

Next Post

உள்துறை அமைச்சர் அமித் ஷா வருகை – பாளையங்கோட்டையில் பாதுகாப்பு ஒத்திகை!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies