உள்துறை அமைச்சர் அமித் ஷா வருகையை முன்னிட்டு நெல்லை பாளையங்கோட்டையில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்றது.
நெல்லையில் இன்று நடைபெறும் பாஜக பூத் கமிட்டி முதல் மண்டல மாநாட்டில் உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்துகொள்கிறார். மதிய வேளையில் தூத்துக்குடி விமான நிலையம் வரவுள்ள அமித் ஷா, தனி ஹெலிகாப்டர் மூலமாக பாளையங்கோட்டை ஆயுதப்படை மைதானத்திற்கு செல்கிறார்.
அதைத் தொடர்ந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் காரில் மாநாட்டுக்கு செல்லவுள்ளார். அமித் ஷாவின் வருகையை முன்னிட்டு ஆயுதப்படை மைதானத்தில் இருந்து மாநாடு நடைபெறும் இடம் வரை பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்றது. அமித் ஷா வாகனத்திற்கு பலத்த பாதுகாப்பு வழங்கும் விதமாக ஒத்திகை நடத்தப்பட்டது.