கர்நாடக சட்டப்பேரவையில் அம்மாநில துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் ஆர்எஸ்எஸ் அமைப்பின் பாடலை பாடிய சுவாரஸ்ய சம்பவம் நிகழ்ந்தது.
கர்நாடக சட்டப்பேரவையில் கடந்த 11ம் தேதி முதல் மழைக்காலத் கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. அவையில், பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் ஏற்பட்ட கூட்டநெரிசல் குறித்த விவாதம் நடைபெற்றது.
அப்போது பேசிய பாஜகவை சேர்ந்த எதிர்கட்சி தலைவரான அசோகா, டி.கே.சிவகுமார் தனது தொடக்க காலத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்புடன் தொடர்பில் இருந்ததை சுட்டிகாட்டி பேசினார். அப்போது எழுந்த டி.கே.சிவகுமார், ஆர்எஸ்எஸ் அமைப்பின் பாரம்பரிய பாடலான ‘நமஸ்தே சதா வத்ஸலே மாத்ருபூமி’ பாடலை பாடினார். இதனை கேட்ட பாஜக உறுப்பினர்கள் மேசையை தட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.