வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழக வெற்றி கழகம் 3 சதவீத வாக்குகள் மட்டுமே பெறும் என இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளார்.
விநாயகர் சதுர்த்தியை ஒட்டி தஞ்சை மாவட்டம் கும்பகோணம் மடத்து தெருவில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது.
இதில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மதுரை தவெக மாநாடு, டாஸ்மாக் கடையில் நடைபெற்ற மாநாடு போல் இருந்ததாக கூறினார். மாநாட்டை எப்படி நடத்துவது என்பது குறித்து ஆர்எஸ்எஸ் அமைப்பிடம் விஜய் கற்றுக் கொள்ள வேண்டும் என்றும், ஆர்எஸ்எஸ் அமைப்பை பற்றி குறைக்கூற அவருக்கு அனுபவம் போதாது எனவும் அர்ஜூன் சம்பத் தெரிவித்தார்.