தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்கு ஆதாரை பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம் என உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பான வழக்கு, உச்சநீதிமன்ற நீதிபதிகள் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, தேர்தல் ஆணையம் கேட்கும் ஆவணங்களில் ஏதேனும் ஒன்று அல்லது ஆதார் அட்டையை பயன்படுத்தி தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்கு விண்ணப்பிக்கலாம் என நீதிமன்றம் தெரிவித்தது.
வாக்காளர் பட்டியலில் இருந்து தவறாக நீக்கப்பட்டவர்களின் ஆதார் விவரங்களை பெற்று மீண்டும் சேர்க்க வேண்டும் என ஆணை பிறப்பித்த நீதிபதிகள்,
இறந்தவர்களை அல்லது இடம்பெயர்ந்தவர்களை தவிர விடுபட்ட நபர்கள் தொடர்பான ஆட்சேபனைகளை செப்டம்பர் 1-ம் தேதிக்குள் சமர்பிக்கவும் உத்தரவிட்டனர்.