தமிழகத்தில் திமுக ஆட்சியை அகற்ற பாஜகவினர் சபதம் ஏற்க வேண்டும் - நயினார் நாகேந்திரன் அழைப்பு!
Aug 22, 2025, 07:39 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழகத்தில் திமுக ஆட்சியை அகற்ற பாஜகவினர் சபதம் ஏற்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் அழைப்பு!

Web Desk by Web Desk
Aug 22, 2025, 05:11 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழகத்தில் திமுக ஆட்சியை அகற்ற பாஜகவினர் சபதம் ஏற்க வேண்டும் என தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

நெல்லை பாஜக பூத் கமிட்டி கூட்டத்தில் பேசிய அவர், அனைவரும் கட்சிக்கென தொலைக்காட்சி அவசியம் என்று பேசிக்கொண்டிருந்தபோது, முதலில் பூத்களை சரி செய்யுங்கள் என்று கட்சியினரை ஊக்குவித்தவர் அமித்ஷா என தெரிவித்தார்

நிறைந்த அமாவாசையில் இயற்கையாகவே இந்த மாநாடு நடைபெறுகிறது. அடுத்த மாநாடு கொங்கு மண்டலத்தில் நடைபெற உள்ளது. 10 வயது குழந்தை முதல் மூதாட்டிகள் வரை யாரும் நடமாட முடியாத நிலை தமிழகத்தில் உள்ளதாக அவர் கூறினார்.

24 லாக்அப் டெத்கள் தமிழகத்தில் நடந்துள்ளது. ஆனால், முதல்வர் ஸ்டாலின் சாரி என்று சொல்லி கடந்து செல்கிறார். கள்ளச்சாரயம் குடித்து இறந்தால் ரூ.10 லட்சம் கொடுக்கும் அவலமே நீடிக்கிறது என்றும் அவர் கூறினார்.

பாஜக ஆட்சி மக்களுக்கான ஆட்சி. திமுக ஆட்சியை அகற்றவேண்டும் என்பதற்காக தேசிய ஜனநாயக கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. சந்தர்ப்பவாத கூட்டணி என முதல்வர் கூறுகிறார். இன்னும் நிறையபேர் கவர்ச்சியோடு கட்சித் தொடங்கி வருகிறார்கள். 2026 தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும் என்றும் அவர் தெரிவித்தார்.

தர்மத்திற்கும், அதர்மத்திற்குமான போர். நீதிக்கும்-அநீதிக்குமான போர்.தர்மம் வென்றாக வேண்டும். ஆகவே, தமிழகத்தில் திமுக ஆட்சியை அகற்ற பாஜகவினர் இன்றே சபதமேற்க வேண்டும். வருங்காலங்களில்உங்களுக்கு அளிக்கும் பணிகளைத் திறம்பட செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

தமிழகத்தைச் சேர்ந்தவர்களை ஆளுநர்களாக நியமித்து அழகுபார்த்த கட்சி பாஜக. தற்போது தமிழரான சி.பி.ராதாகிருஷ்ணன் துணை குடியரசுத் தலைவராகப் போட்டியிடுகிறார். .

திமுக தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. பெட்ரோல்- டீசல் விலை குறைப்போம், மீனவர்களுக்கு வீடுகள் கட்டிக் கொடிப்போம், பட்டதாரி ஆசிரியர்களுக்கு கடனுதவி அளிப்போம், அரசு மருத்துவமனைகளில் காலிப்பணியடங்களை நிரப்புவோம், பள்ளிகளில் இணையவசதியுடன் கணினிமயமாக்குவோம், மாதந்தோறும் மின்கட்டணம் எடுத்து கட்டணச்சுமை குறைப்போம் என வாக்குறுதி அளித்தனர். அவை நிறைவேற்றப்படவில்லை எனறும் அவர் கூறினார்.

தேர்தல்தோறும் பல்வேறு வாக்குறுதி கொடுப்பது திமுகவின் வழக்கம், தேர்தல் முடிந்த பின்பு அதை மறப்பது அவர்களது பழக்கம். இன்னும் 8 மாதங்களே தேர்தலுக்கு உள்ளதால் பாஜக தொண்டர்கள் கடுமையாக உழைக்க வேண்டும் என நயினார் நாகேந்திரன் கேட்டுக்கொண்டார்.

Tags: DMKamith shahTamil Nadu BJP state president Nainar Nagendrannellai BJP booth committee meetingTamil Nadu BJP state president Nainar Nagendran speechTamil Nadu
ShareTweetSendShare
Previous Post

கூவத்தூர் அனிருத் இசை நிகழ்ச்சி – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

Next Post

இந்தியாவில் மிகப்பெரிய ஊழல் கட்சி திமுக – மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குற்றச்சாட்டு!

Related News

நெய்வேலி திரையரங்கில் கேப்டன் பிரபாகரன் படம் பார்த்த பிரேமலதா விஜயகாந்த்!

அக்னி-5 ஏவுகணை சோதனை வெற்றி – சீனாவின் எந்த பகுதியையும் இந்தியா இனி தாக்கலாம்!

பொது இடங்களில் தெரு நாய்களுக்கு உணவளிக்க தடை – உச்ச நீதிமன்றம்

இந்தியாவில் மிகப்பெரிய ஊழல் கட்சி திமுக – மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குற்றச்சாட்டு!

கூவத்தூர் அனிருத் இசை நிகழ்ச்சி – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

சென்னையின் பிரதான சாலைகளில் மழைநீர் தேக்கம் – வாகன ஓட்டிகள் அவதி!

Load More

அண்மைச் செய்திகள்

தமிழகத்தில் திமுக ஆட்சியை அகற்ற பாஜகவினர் சபதம் ஏற்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் அழைப்பு!

தமிழக வெற்றி கழகம் 3 சதவீத வாக்குகள் மட்டுமே பெறும் – அர்ஜுன் சம்பத்

அம்பாசமுத்திரம் அருகே தெரு நாய் கடித்ததில் 2-ம் வகுப்பு மாணவி படுகாயம்!

கேரள மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் மீது பாலியல் குற்றச்சாட்டு – அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் ராகுல்!

2 லிட்டர் வாங்கினால் ஒரு லிட்டர் இலவசம் – பொன்னமராவதி அருகே பெட்ரோல் நிலையத்தில் குவிந்த வாகனங்கள்!

காது, மூக்கில் நகை இருந்தால் ரூ.1000 கிடையாது – அமைச்சரின் பேச்சுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்!

சட்டப்பேரவையில் ஆர்எஸ்எஸ் பாடலை பாடிய துணை முதல்வர் – மேசையை தட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்திய உறுப்பினர்கள்!

தேர்தலுக்கு திமுகவிடம் பணம் வாங்கியது உண்மைதான் – முத்தரசன் ஒப்புதல்!

சென்னை தமிழ்நாட்டின் இதயத்துடிப்பு – முதல்வர் ஸ்டாலின்

“உங்களுடன் ஸ்டாலின்” நிகழ்ச்சியில் அடுக்கடுக்கான கேள்வி கேட்டவரை திட்டிய திமுக எம்எல்ஏ – வீடியோ வைரல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies