இந்தியாவில் மிகப்பெரிய ஊழல் கட்சி திமுக - மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குற்றச்சாட்டு!
Mar 15, 2026, 06:15 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்தியாவில் மிகப்பெரிய ஊழல் கட்சி திமுக – மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குற்றச்சாட்டு!

Ramamoorthy S by Ramamoorthy S
Aug 22, 2025, 05:48 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

2026 தேர்தலில் திமுகவை வேரோடு பிடுங்கி எறிய வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

நெல்லையில் நடைபெற்ற பாஜக பூத் பொறுப்பாளர்கள் மாநாட்டில் உரையாற்றிய அவர்,தமிழரான அப்துல் கலாமை நாட்டின் முதல் குடிமகன் பதவியில் அமர்த்தி அழகு பார்த்ததாகவும் மாநிலங்களவை தலைவராக தமிழகத்தை சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் வீற்றிருப்பார் என தெரிவித்தார்.

தமிழ் மண், மக்கள், மொழி, பண்பாடு என அனைத்தையும் பாதுகாத்தவர் பிரதமர் மோடி என்றும், திருக்குறளை 13-க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்த்து தமிழுக்கு பிரதமர் பெருமை சேர்ந்துள்ளதாகவும் அவர் கூறினார்.

ஆப்ரேஷன் சிந்தூர் மூலம் பாகிஸ்தான் தீவிரவாதிகளை தேடித்தேடி அழித்ததாக தெரிவித்த அவர், ஆப்ரேஷன் மகாதேவ் நடவடிக்கை மூலம் பஹல்காம் தாக்குதல் தீவிரவாதிகள் அழிக்கப்பட்டதாகவும் கூறினார்.

பதவி பறிப்பு மசோதாவை கருப்பு சட்டம் எனக்கூற முதல்வர் ஸ்டாலினுக்கு அதிகாரம் இல்லை என்றும், பிரதமர், முதலமைச்சர் என யாராக இருந்தாலும் ஊழல் செய்தால் சிறைக்கு செல்ல வேண்டுமென அவர் கூறினார்.

சிறையில் இருப்பவர்கள் ஆட்சியாளர்களாக இருக்க முடியுமா? என பொன்முடி மற்றும் செந்தில் பாலாஜியை அவர் கோடிட்டு காட்டினார்.

இந்தியாவில் மிகப்பெரிய ஊழல் கட்சி திமுக எனவும், திமுக ஆட்சியாளர்கள் ஏராளமான ஊழல் செய்து கொண்டிருப்பதாகவும் குற்றம்சாட்டினார்.

ராகுல் காந்தி பிரதமராக வர வேண்டும் என இண்டி கூட்டணி விரும்புகிறது என்றும், உதயநிதி தமிழக முதல்வராக வர வேண்டும் என திமுகவினர் கனவு காண்பதாகவும் அவர் கூறினார்.

ஆனால் ஒரு காலத்திலும் ராகுல் காந்தி பிரதமராக ஆக முடியாது என்றும், உதயநிதி முதல்வராக ஆக முடியாது என்றும் அமித் ஷா குறிப்பிட்டார்.

2026-ல் அதிமுக – பாஜக கூட்டணிதான் தமிழகத்தில் ஆட்சி அமைக்கப் போவது உறுதி என்றும், தேசிய ஜனநாயக கூட்டணி தமிழ்நாட்டை மேன்மை அடைய செய்யும் என்றும் அவர் தெரிவித்தார்.

முன்னதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா முன்னிலையில், திமுக முன்னாள் நிர்வாகி கே.எஸ்.ராதாகிருஷ்ணன் பாஜகவில் இணைந்தார். தொடர்ந்து அமித் ஷாவுக்கு பாஜக நிர்வாகிகள் பிரமாண்ட தாமரை மாலையை அணிவித்து கெளரவித்தனர்..

 

Tags: Operation Sindoornellai BJP booth committee meetingamith shah speechprime minister modihome minister amith shah2026 elections.
ShareTweetSendShare
Previous Post

தமிழகத்தில் திமுக ஆட்சியை அகற்ற பாஜகவினர் சபதம் ஏற்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் அழைப்பு!

Next Post

பொது இடங்களில் தெரு நாய்களுக்கு உணவளிக்க தடை – உச்ச நீதிமன்றம்

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies