பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் இல்லத்தில் நடைபெற்ற தேநீர் விருந்தில் பங்கேற்ற உள்துறை அமைச்சர் அமித் ஷா, தேர்தல் வியூகம் குறித்தும் ஆலோசனை நடத்தினார்.
நெல்லையில் தமிழக பாஜக சார்பில் பூத் பொறுப்பாளர்கள் மாநாடு நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக கேரள மாநிலம் கொச்சியில் இருந்து சிறப்பு விமானம் மூலம் உள்துறை அமைச்சர் அமித்ஷா தூத்துக்குடி விமான நிலையம் வந்தடைந்தார்.
அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் பாளையங்கோட்டை சென்று பின்னர் சாலை மார்க்கமாக மாநாட்டிற்கு சென்றார். தொடர்ந்து மாநாட்டை நிறைவு செய்த அமித் ஷா, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் இல்லத்தில் நடைபெற்ற தேநீர் விருந்தில் கலந்து கொண்டார்.
இந்த விருந்தில் 35 வகையான உணவுகள் பறிமாறப்பட்டன. பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை, மேலிடப் பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி உள்ளிட்டோரும் விருந்தில் கலந்து கொண்டனர். தொடர்ந்து சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு பாஜகவின் வியூகங்கள் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பாக நயினார் நாகேந்திரன் மற்றும் அண்ணாமலையுடன் அமித்ஷா ஆலோசனை நடத்தினார்.