சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலைக்கு நன்றி தெரிவித்து அதிமுகவினர் போஸ்டர் ஒட்டியுள்ளனர்.
நெல்லையில் நடைபெற்ற பாஜக பூத் பொறுப்பாளர்கள் மாநாட்டில் பேசிய தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சராக்க அனைவரும் பாடுபட வேண்டும் என தெரிவித்திருந்தார்.
அண்ணாமலையின் இந்த பேச்சுக்கு வரவேற்பு தெரிவித்த அதிமுகவினர், நன்றி தெரிவித்து போஸ்டர் ஒட்டியுள்ளனர்.
அதிமுக மாவட்ட இளைஞரணி துணைச்செயலாளர் மணிமாறன் பெயரில் ஒட்டியுள்ள போஸ்டரில், எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக்க வேண்டும் என தெரிவித்த அண்ணாமலைக்கு கோடான கோடி நன்றி என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது.