பிரதமர் மோடியின் வழிகாட்டுதல் காரணமாகவே சந்திரயான் 3 திட்டம் மாபெரும் வெற்றி அடைந்ததாக இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்துள்ளார்.
தேசிய விண்வெளி தினத்தையொட்டி டெல்லியில் உரையாற்றிய அவர், ஆகஸ்ட் 23-ம் தேதி வரலாற்று சிறப்புமிக்க நாள் என தெரிவித்தார்.
2023-ம் ஆண்டு இதே நாளில், சந்திரனின் தென் துருவத்தில் சந்திரயான் 3 வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டதாக கூறிய அவர், இதனை வெற்றிகரமாக தரையிறக்கிய ஒரே நாடு இந்தியா என தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், பிரதமர் மோடியின் வழிகாட்டுதல் காரணமாகவே சந்திரயான் 3 திட்டம் மாபெரும் வெற்றி அடைந்ததாக புகழாரம் சூட்டினார்.