ஆட்சியாளர்களின் அலட்சியத்தால் பலியாகும் அப்பாவி உயிர்கள் - நயினார் நாகேந்திரன் கண்டனம்!
Oct 9, 2025, 08:31 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆட்சியாளர்களின் அலட்சியத்தால் பலியாகும் அப்பாவி உயிர்கள் – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

Web Desk by Web Desk
Aug 23, 2025, 06:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆட்சியாளர்களின் அலட்சியத்தால்  அப்பாவி உயிர்கள்  பலி ஆவது தொடர் கதையாகி வருவதாக தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள பதிவில், சென்னை கண்ணகி நகரில் தேங்கியிருந்த மழைநீரில், மின்கம்பி அறுந்து விழுந்து மின்சாரம் பாய்ந்ததால், பெண் தூய்மைப் பணியாளர் ஒருவர் பலியான சம்பவம் மனதை பதைபதைக்க வைக்கிறது. இறந்த தூய்மைப் பணியாளர் திருமதி. வரலட்சுமி அவர்களின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்தித்துக் கொள்வதாக தெரிவித்துள்ளார்.

இந்த கனத்த தருணத்தில் ஒரு கட்சித் தலைவர் என்பதைத் தாண்டி, சாதாரண குடிமகனாக மனதில் ஆயிரம் கேள்விகள் எழுகின்றன. ஒரு நாள் மழைக்கே ஓர் அப்பாவி உயிர் பலியாகும் அளவிற்கு, ஒரு மாநிலத் தலைநகரின் நிர்வாகம் சீர்கெட்டு உள்ளதா? அதிலும் சென்னையில் மின்கம்பி அறுந்து விழுந்து, கடந்த 7 வாரங்களில் மட்டும் 5 உயிர்கள் பறிக்கப்பட்டுள்ளதைப் பார்க்கையில், ‘விடியல் ஆட்சியில்’ மின்சார வாரியம் விழித்துக் கொண்டு தான் இருக்கிறதா? என கேள்வி எழுப்பியுள்ளார்.

ஆகஸ்ட் மழைக்கே சென்னை அல்லாடுகிறது என்றால் டிசம்பரில் தலைநகரின் கதி என்ன? மழைநீர் தேங்கினால் என்ன, மின்சாரம் பாய்ந்தால் என்ன, தெருவில் நடந்து செல்லப்போவது ஏழை, எளிய மக்கள் தானே, எக்கேடு கெட்டால் என்ன என்ற அலட்சிய எண்ணமா? என்றும் அவர் வினவியுள்ளார்.

‘தமிழ்நாட்டின் இதயத்துடிப்பு சென்னை’ என்று சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட முதல்வர் ஸ்டாலின் இதயத்தின் மீது விழும் எலெக்ட்ரிக் ஷாக்கையும் கவனிக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

மறைந்த தூய்மைப் பணியாளரின் குழந்தைகள் அழும் கதறலொலியைக் கேட்ட பின்பாவது, விளம்பரத்தையும் சமூக வலைத்தளத்தையும் விட்டு வெளியே வந்து, இது போல மேலும் பல உயிர்கள் காவு வாங்கப்படுவதைத் தடுக்கும் விதமாக, மழைக்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுக்க வேண்டும் என நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

Tags: electric wire fallingrainwater in Kannagi NagarChennaiTamil Nadu BJP state president Nainar Nagendranfemale sanitation worker diedVaralakshmi died
ShareTweetSendShare
Previous Post

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

Next Post

தனியார் கட்டிடங்களில் அங்கன்வாடி மையங்கள் – குழந்தைகளின் பாதுகாப்புக்கு யார் பொறுப்பு? என அண்ணாமலை கேள்வி!

Related News

பைரசி படங்களை பதிவேற்றிய 21 வயது இளைஞர் : அதிரவைக்கும் நெட்வொர்க் – அதிர்ச்சியூட்டும் பின்னணி!

பழங்களை மட்டுமே உட்கொண்ட இளம்பெண் உயிரிழப்பு : ஆபத்தில் முடிந்த உடல் எடைகுறைப்பு!

ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்திற்கு ரூ.85,790 கோடி அபராதம் : புற்றுநோய் ஏற்படுத்திய பவுடர் அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

தொல்பொருள் ஆய்வுக்கு வலியுறுத்தல் : விளைநிலத்தில் கண்டெடுக்கப்பட்ட 10ம் நுாற்றாண்டு புத்தர்சிலைகள்!

வியாபாரிகள் போட்டா போட்டி : “தீபாவளி”க்கு டிசைன் டிசைனாய் துப்பாக்கிகள்!

“பட்டா கொடுத்தும் பலனில்லை” : திரும்பிப் பார்க்குமா திமுக அரசு?

Load More

அண்மைச் செய்திகள்

ஜாதி பெயர் மாற்றம் என்ற பெயரில் தமிழகம் முழுவதும் கருணாநிதி பெயர் சூட்டும் அவலம்- எல் முருகன்

சிறப்பு புலனாய்வு குழு மனுவிற்கு தவெக தரப்பு வழக்கறிஞர்கள் எதிர்ப்பு!

இந்திய விமானப்படை விழாவின் இரவு விருந்தின் உணவு பட்டியல் வைரல்!

அணியில் இடமில்லை – மவுனம் கலைத்த முகமது ஷமி

மதுரை : கிரிக்கெட் வீரர் தோனிக்கு உற்சாக வரவேற்பு!

Perplexityயின் Comet AI-ன் செயலால் எக்ஸ் தளத்தில் வெடித்த விவாதம்!

வசூலை வாரி குவிக்கும் காந்தாரா Chapter 1!

ஜப்பான் : சாலையில் நடந்து சென்ற பெண்ணை தாக்க முயன்ற கரடி!

திருப்பத்தூர் : உங்களுடன் ஸ்டாலின் முகாமில் எம்.எல்.ஏ-வை முற்றுகையிட்ட மக்கள்!

மேற்கு வங்கத்தில் நிலச்சரிவு – பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிகிச்சை அளிக்க ஜிப்லைன் மூலம் சென்று மருத்துவருக்கு பாராட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies