கூடலூர் அருகே உலா வரும் காட்டு யானை, குடியிருப்பு பகுதியின் சுற்றுச்சுவரை இடித்து சேதப்படுத்திய சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
நீலகிரி மாவட்டம் கூடலூர், பந்தலூர், தேவாலா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உணவு மற்றும் தண்ணீர் தேடி குடியிருப்பு பகுதிகளுக்குள் காட்டு யானைகள் உலா வருவது தொடர் கதையாகவே உள்ளது.
இந்நிலையில், மேல் கூடலூர் குடியிருப்பு பகுதியில் இரவு நேரத்தில் உணவு தேடி வந்த ஒற்றைக் காட்டு யானை, இருவேறு இடங்களில் தடுப்பு சுவரை இடித்து சேதப்படுத்தியுள்ளது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது
மேல் கூடலூரில் குடியிருப்பு பகுதியில் உலா வரும் காட்டு யானையை வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.