திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே மக்கள் அதிகம் கூடும் பகுதியில் ஒருவர், ஓட ஓட அரிவாளால் வெட்டப்பட் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நெய்க்காரப்பட்டியை சேர்ந்த கணேசன் என்பவருக்கும், அதே பகுதியை சேர்ந்த சின்னக்காளை என்பவருக்கும் இடையே முன்பகை இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அங்கிருந்த தேநீர் கடையில் கணேசன் தேநீர் அருந்தி கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த சின்னக்காளை, அவரை ஓட ஓட அரிவாளால் வெட்டியுள்ளார். இதில் படுகாயமடைந்த கணேசன், அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதனிடையே கணேசனை அரிவாளால் வெட்டிய சின்னக்காளை பழனி காவல் நிலையத்தில் சரணடைந்தார்.