மதுரையில் இரவில் கொட்டி தீர்த்த மழையால் பெரும்பாலான பகுதியில் குளம் போல மழைநீர் தேங்கியது.
மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பகல் நேரத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில், இரவில் திடீரென கனமழை பெய்ய தொடங்கியது.
குறிப்பாக, ஒத்தக்கடை, திருப்பரங்குன்றம், நாகமலை புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளிலும், மாநகர் பகுதியான மாட்டுத்தாவணி, பழங்காநத்தம், ஆரப்பாளையம் , கோரிப்பாளையம் , சிம்மக்கல் உள்ளிட்ட இடங்களிலும் பரவலாக மழை பெய்தது.
இதனால், சாலைகளிலும், தாழ்வான பகுதிகளிலும் மழைநீர் தேங்கியதால், பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கடும் அவதியடைந்தனர்.