தொடர் மழையால் பல்வேறு வடமாநிலங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
ஹரியானா மாநிலத்தின் பல இடங்களில் கடந்த சில நாட்களாக
பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால், சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது.
உத்தராகண்ட் மாநிலம் சமோலியில் மேக வெடிப்பால் சேதமைடந்த பகுதிகளை சீரமைக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. திடீரென பெய்த கனமழையால், தாராலி மார்க்கெட், கோட்தீப் உள்ளிட்ட பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. மேலும், நிலச்சரிவால் பல்வேறு இடங்களில் சாலை போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இந்த பாதிப்புகளை சரிசெய்யும் பணியில் இரவு பகலாக ஊழியர்கள் ஈடுபட்டுள்ளளனர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சஹார் ஆற்றில் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், பழைய சம்பா – கதுவா சாலையில் உள்ள கிராமங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. மேலும், அப்பகுதி முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களை மீட்டு முகாம்களில் தங்க வைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.