எம்மதமும் சம்மதம் என்கிற நிலைப்பாட்டில் உள்ள மதம் ஹிந்து மதம் என பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
நாகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், நாகை மாவட்டத்தில் 50 கோயில்களுக்கு கும்பாபிஷேகம் செய்யப்பட்டுள்ளது பாராட்டுக்குரியது என தெரிவித்தார்.
நமது 200 ஆண்டுகால பாரம்பரியத்தை ஆங்கிலேயர்கள் உடைத்தனர், கடந்த 200 ஆண்டுகளில் ஹிந்து தர்மத்திற்கு வந்த சோதனை அளவற்றது என்றும் கூறினார்.
எல்லா மதமும் சம்மதம் எனும் ஹிந்து மதத்திற்கு எந்த மதம் மீதும் பயம் கிடையாது என்றும்,
சாதாரண மக்களையும் பகவத் கீதை சென்றடைய வேண்டும் என்றும் அவர் தெரிவத்தார்.
சமஸ்கிருத மொழியை முழுமையாக கற்க வேண்டும் என்றும் அண்ணாமலை கூறினார்.