கிட்னி திருட்டு விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரில் உரையாற்றிய அவர்,பொதுவாக பணம், நகை திருடுவார்கள், திமுக ஆட்சியில்தான் உடலிலுள்ள உறுப்புகளை எல்லாம் திருடுகிறார்கள் என தெரிவித்தார்.
பதவி வகிப்பவர்கள் ஏழைகளின் வயிற்றில் அடித்து உறுப்புகளை எடுப்பது குற்றம் என்றும், அதிமுக ஆட்சி அமைந்தவுடன் முழுமையான விசாரணை நடத்தி சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.
10 சதவீத வாக்குறுதிகளைக் கூட திமுக அரசு நிறைவேற்றவில்லை என்றும் இபிஎஸ் குற்றம்சாட்டினார்.