ட்ரீம் 11 உடனான இந்திய கிரிக்கெட் அணியின் ஜெர்சி ஸ்பான்சர் ஒப்பந்தம் ரத்து செய்யப்படுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.
கடந்த 2023-ல் இந்திய கிரிக்கெட் அணியின் லீட் ஜெர்ஸி ஸ்பான்சராக ‘ட்ரீம்11’ அறிவிக்கப்பட்டது. மூன்று ஆண்டுகளுக்கு இந்த ஒப்பந்தம் உறுதி செய்யப்பட்டது.
இந்நிலையில் ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் நிறைவேற்றப்பட்ட நிலையில் ட்ரீம் 11 உடனான இந்திய கிரிக்கெட் அணியின் ஜெர்சி ஸ்பான்சர் ஒப்பந்தம் ரத்து செய்யப்படுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.
எதிர்காலத்தில் இது போன்ற நிறுவனங்களுடன் எந்த ஒப்பந்தமும் வைத்துக் கொள்ள மாட்டோம் என்றும் பிசிசிஐ தெரிவித்துள்ளது.