தெலங்கானாவில் கர்ப்பிணி மனைவியைக் கொன்று உடலை துண்டு, துண்டாக வெட்டி எடுத்துச் சென்று ஆற்றில் வீசிய கணவனை போலீசார் கைது செய்துள்ளனர்.
மேட்ச்சல் மாவட்டம் மெடிப்பள்ளியை சேர்ந்த மகேந்திர ரெட்டி, சுவாதி என்ற பெண்ணைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார். தொடர்ந்து இருவரும் அப்பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்துள்ளனர்.
சுவாதி 5 மாதம் கர்ப்பமாக இருந்த நிலையில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி பிரச்னை ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் இருவருக்கும் இடையே மீண்டும் பிரச்னை ஏற்பட சுவாதியை, மகேந்திர ரெட்டி அடித்துக் கொலை செய்துள்ளார். தொடர்ந்து அவரது உடலைத் துண்டு, துண்டாக வெட்டி சில உடல்பாகங்களை மூசி ஆற்றில் வீசிச் சென்றுள்ளார்.
எஞ்சிய உடல் பாகங்களை பார்சல் கட்டி எடுத்துச் சென்றபோது ஒரு சிறுவன் அதனை கண்டு அப்பகுதியினரிடம் கூறியதால் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து மகேந்திர ரெட்டியை கைது செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.