கர்நாடகாவில் உள்ள கோயிலில் பக்தர்களிடம் தவறாக நடந்துகொண்ட பூசாரியை, அங்கிருந்த இளைஞர்கள் சரமாரியாகத் தாக்கியுள்ளனர்.
தும்கூர் மாவட்டம் தேவராயனதுர்கா கோயிலின் பூசாரி நாகபூஷணாச்சாரயார் என்பவர் பிரசாதம் வழங்கும்போது பெண்களிடம் தவறாக நடந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.
இதனைப் பார்த்த அங்கிருந்த இளைஞர்கள் மற்றும் பெண்கள், பூசாரியைக் கடுமையாகத் தாக்கினர்.
பின்னர், வலி தாங்க முடியாமல் பெண்ணின் காலில் விழுந்து பூசாரி மன்னிப்பு கேட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.